• Tue. Jul 14th, 2026

24×7 Live News

Apdin News

1,900 ஆபாசப் படங்கள், 400 வீடியோக்கள்… நாகர்கோவில் காசியின் ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது உயர் நீதிமன்றம்!

Byadmin

Jul 14, 2026


நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறை தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (ஜூலை. 14) உறுதி செய்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி, அவர்களை ஏமாற்றி, தவறான கோணத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து, அதை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக கடந்த 2020ஆம் ஆண்டு நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி விசாரணையில் காசியின் மடிக்கணினியில் இருந்து 1,900 ஆபாச புகைப்படங்கள் மற்றும் 400 ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இவரால் ஏமாற்றப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

By admin