• Fri. Oct 30th, 2026

24×7 Live News

Apdin News

ஒரு ஊசி ரூ.16 கோடி: தமிழ்நாட்டில் இந்த குழந்தைகளை பாதித்துள்ள அரிய நோய் என்ன? முழு விவரம்

Byadmin

Oct 30, 2026


மருந்தின் விலை 16 கோடி ரூபாய்' : மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் - சென்னையில் பெற்றோர் மறியலில் ஈடுபட்டது ஏன்?

“எங்களுக்கு யாருமே உதவி செய்யவில்லை. எங்கள் குழந்தைகளைக் காப்பாற்றித் தருவீர்கள் என நம்புகிறோம். குழந்தைகளின் புகைப்படங்களைத் தெருவில் பரப்பி அரசாங்கத்திடம் உதவி கேட்கிறோம்”

சென்னை வாலாஜா சாலையில் திங்கள்கிழமை (அக்டோபர் 26) சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது இவ்வாறு முழக்கம் எழுப்பினர்.

முன்னதாக, அரசின் சுகாதாரத்துறை செயலரை சந்தித்து தங்கள் குழந்தைகளை பாதித்துள்ள எஸ்.எம்.ஏ எனப்படும் அரிய வகை மரபணு நோய் சிகிச்சைக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

எஸ்.எம்.ஏ எனப்படும் முதுகுத் தண்டுவட தசைநார் வலுவிழப்பு நோய் என்றால் என்ன? இதனைக் கண்டறிவது எப்படி?

9 மாத பெண் குழந்தைக்கு அரிய நோய் பாதிப்பு

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த உதயகுமாரின் ஒன்பது மாத மகள் குகமித்ரா தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



By admin