• Fri. Oct 30th, 2026

24×7 Live News

Apdin News

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஏ ஓ டி’ திரைப்படத்தின் அப்டேட்

Byadmin

Oct 30, 2026


பான் இந்திய நட்சத்திர நடிகரான துல்கர் சல்மான் கதையின் நாயகனாக உணர்வு பூர்வமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஏ ஓ டி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ராதே ராதே ..’ எனத் தொடங்கும் பாடலும்,  பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பவன் சடிநேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏ ஓ டி’ திரைப்படத்தில் துல்கர் சல்மான்- சாத்விகா வீரவல்லி- ஸ்ருதிஹாசன் – ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ்-  ஸ்வப்னா சினிமா – லைட் பாக்ஸ் மீடியா-  ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இருபதாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ராதே ராதே பாதை இதுவே விலகாதே.. மலரும் மணம் எல்லாம் பிருந்தாவனம் கிடையாதே ..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் எழுத, பின்னணி பாடகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் பாடகி லிப்ஸிகா பாஷ்யம் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இதமான மெல்லிசையாக உருவாகியுள்ள இந்தப் பாடலும்,  பாடலுக்கான காணொளியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது

The post நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஏ ஓ டி’ திரைப்படத்தின் அப்டேட் appeared first on Vanakkam London.

By admin