• Mon. Apr 20th, 2026

24×7 Live News

Apdin News

‘ஒரு கனவால் புற்றுநோயை கண்டறிந்தேன்’ – எதிர்காலம் பற்றி கனவு மூலம் மூளை சேதி தருகிறதா?

Byadmin

Apr 20, 2026


கனவு என்பது என்ன? மூளைக்கும் கனவுக்கும் என்ன தொடர்பு?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அந்தக் கனவு மட்டும் வந்திருக்காவிட்டால், தனது நோய் அந்த நேரத்தில் கண்டறியப்பட்டிருக்காது என்று அடெலின் கூறுகிறார்.

அடெலின் கடந்த 2011-ஆம் ஆண்டு தன் வாழ்க்கையையே மாற்றும் ஒரு கனவு கண்டார்.

அதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்புதான் அவருடைய தாயார் இறந்திருந்தார், அதனால் அவர் மிகுந்த துயரில் இருந்தார்.

ஹாங் காங்கை சேர்ந்த அடெலின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவருடைய தாயார் கனவில் வந்துள்ளார்.

“‘அம்மா உன்னை பார்த்துவிட்டேன், எப்படி இருக்கிறீர்கள்?’ என கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. அதற்கு என் அம்மா, ‘நான் நன்றாக இருக்கிறேன், ஆனால் நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். கூடுமானவரை சீக்கிரமாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்.’ என்றார்” என்கிறார் அடெலின்.

தன் தாயார் கனவில் கூறியதை தீவிரமாக எடுத்துக்கொண்டு அடெலின் மருத்துவரை சென்று பார்த்துள்ளார். அவருக்கு ஆரம்பநிலை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டதால் சிகிச்சை அளிக்கக்கூடியதாக இருந்தது.

By admin