சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஏப்ரல் 20) காலை நடைப்பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
அங்கிருந்த பொதுமக்களிடம் அண்ணா நகர் திமுக வேட்பாளர் சிற்றரசு-ஐ ஆதரித்து அவர் பரப்புரை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பூங்காவில் இருந்தவர்கள் ஸ்டாலின் உடன் ஆர்வமுடன் கைகுலுக்கியும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
இதன்போது வேட்பாளர் சிற்றரசு, தயாநிதி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 21) உடன் இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் பம்பரமாக சுழன்று வாக்கு அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர்.
#WATCH | Tamil Nadu Assembly elections: Tamil Nadu Chief Minister and DMK candidate from Kolathur, MK Stalin, interacts with the people in Chennai's Anna Nagar Tower Park area during his morning walk campaign #TamilNaduAssemblyElections2026 pic.twitter.com/ApFmmG7t3s
— ANI (@ANI) April 20, 2026