• Sat. Aug 15th, 2026

24×7 Live News

Apdin News

ஒரு லிட்டர் கோமியம் 10 ரூபாய்: உத்தர பிரேதசத்தில் புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

Byadmin

Aug 15, 2026


உத்தர பிரேதசத்தில் 'ஒரு லிட்டர் கோமியம் 10 ரூபாய்' - விவசாயிகள் பயனடைவது எப்படி? எதிர்ப்பு ஏன்?

பட மூலாதாரம், Getty Images

உத்தர பிரதேசத்தின் புலந்த்ஷஹரில் கோமியத்தை ஒரு லிட்டர் 10 ரூபாய் என்ற விலையில் வாங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாட்டு கோமியத்தில் இருந்து இயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தயாரிக்கும் இந்த முன்முயற்சி திட்டத்தை விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பு ஒன்று புலந்த்ஷஹரில் தொடங்கியுள்ளது.

இதன் மூலம் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும், பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும், இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என்று அரசு கூறுகிறது.

இந்தத் திட்டம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள சமாஜ்வாதி கட்சி, உத்தர பிரதேச அரசு பசுவின் பெயரால் மக்களை ஏமாற்றியுள்ளதாகக் விமர்சித்துள்ளது. “ஒரு கிலோ உருளைக்கிழங்கு ஒரு ரூபாய்க்கு வாங்கப்படும் நிலையில் அரசு அதில் கவனம் செலுத்தவில்லை” என்றும் அந்த கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இதை வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுடனும் அந்தக் கட்சி தொடர்புபடுத்தியுள்ளது.

சமாஜ்வாதி கட்சி இதை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் நடவடிக்கை எனக் கூறியுள்ள நிலையில், புதிய முயற்சிகளுக்கு எதிராக செயல்படுவது சமாஜ்வாதி கட்சியின் இயல்பு என்று பாஜக விமர்சித்துள்ளது.

இந்தத் திட்டம் இதுவரை உத்தர பிரதேசம் முழுவதுமாக செயல்படுத்தப்படவில்லை. இது புலந்த்ஷஹர் மாவட்டத்தின் ச்யானா தாலுக்காவின் நர்சைனா கிராமத்தில் தொடங்கப்பட்டு, அதைச் சுற்றியுள்ள சுமார் 15 கிராமங்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த முயற்சி தொடங்கப்பட்டதில் இருந்து பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன.

By admin