• Fri. Jul 24th, 2026

24×7 Live News

Apdin News

ஒற்றை பிரசவத்தில் ஒரே மாதிரி 4 குழந்தைகளை பிரசவித்த பெண் – ஆஸ்திரேலியாவில் என்ன நடந்தது?

Byadmin

Jul 24, 2026


ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்

பட மூலாதாரம், Metro North Health

    • எழுதியவர், ஏமி வாக்கர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் இயற்கையான முறையில் உருவான அரிதான, ஒரே மாதிரியான நான்கு குழந்தைகளை (Identical Quadruplets) பெற்றெடுத்துள்ளார். இந்த கர்ப்பம் “மிகவும் அதிக ஆபத்தானது” என்று ராயல் பிரிஸ்பேன் மற்றும் மகளிர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்த நான்கு பெண் குழந்தைகளும் ஜூலை 14ஆம் தேதி, கர்ப்பமான 28 வாரங்கள் மற்றும் 4 நாட்களில் சிசேரியன் மூலம் பிறந்தன. இவர்கள் மோனோசைகோட்டிக் குவாட்ரப்ளெட்ஸ் (Monozygotic quadruplets ) வகையைச் சேர்ந்த குழந்தைகள். அதாவது, ஒரு கருவுற்ற முட்டை நான்கு கருக்களாகப் பிரிந்து உருவான குழந்தைகள்.

34 வயதான ஜெனிடார் நாமோனா என்ற இந்த குழந்தைகளின் தாய்க்கும், அவரது கணவர் ஜோர்தாமிற்கும் ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளனர். நான்கு குழந்தைகள் பிறக்கப் போகிறது என்று கூறப்பட்டபோது அவர்கள் “பெரும் ஆச்சரியத்தில்” ஆழ்ந்ததாக மருத்துவமனை தெரிவித்தது.

கர்ப்பத்தின் தொடக்கத்திலிருந்தே ஜெனிட்டாருக்கு சிகிச்சை அளித்த தாய்-சேய் மருத்துவ நிபுணரும் மகப்பேறு மருத்துவருமான மருத்துவர் அலெக்சா பெண்டால், இயற்கையாகவே ஒரே மாதிரியான நான்கு குழந்தைகள் உருவாகும் நிகழ்வு 1.5 கோடி கர்ப்பங்களில் ஒன்றில் மட்டுமே நிகழக்கூடும் என மதிப்பிட்டார்.

“அனைத்து குழந்தைகளும் ஒரே நஞ்சுக்கொடியைப் பகிர்ந்து கொள்வது குறித்து இதற்கு முன்பு கேள்விப்பட்டதே இல்லை” என்றும் அவர் கூறினார்.

By admin