• Sun. Oct 18th, 2026

24×7 Live News

Apdin News

கண்ணதாசனின் காதல், தத்துவம், ஆன்மிகப் பாடல்களில் ஒளிந்திருக்கும் இலக்கிய நயங்கள் என்ன?

Byadmin

Oct 18, 2026


கவிஞர் கண்ணதாசன், தமிழ் திரையுலகம், இலக்கியம்

    • எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் காதல், சோகம், மகிழ்ச்சி, தத்துவம், ஆன்மிகம் என மனித வாழ்வின் பல்வேறு உணர்வுகளையும் தனது வரிகளால் வெளிப்படுத்தியவர் கவிஞர் கண்ணதாசன். அவரது 45வது நினைவுநாள் அக்டோபர் 17-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.

காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்த கண்ணதாசன், 4,000க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5,000க்கும் அதிகமான திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

கவிதைத் தொகுப்புகள், காவியங்கள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள், வாழ்வியல் நூல்கள், நாவல்கள், சுயசரிதை என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள அவர், சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞராக இருந்த கண்ணதாசன், தனது ‘சேரமான் காதலி’ நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். திரைப்படப் பாடலாசிரியராக மட்டுமின்றி நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி எனப் பல தளங்களிலும் இயங்கிய அவர், தொடக்கத்தில் நாத்திகக் கருத்துகளைக் கொண்டிருந்தார். பின்னாளில் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற நூலையும் எழுதினார்.

கவிஞர் கண்ணதாசன், தமிழ் திரையுலகம், இலக்கியம்

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில், 1981-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த தமிழ்ச் சங்க விழாவில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தபோது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிகாகோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணதாசன், சிகிச்சைப் பலனின்றி அக்டோபர் 17-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு, அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

By admin