• Mon. Aug 10th, 2026

24×7 Live News

Apdin News

கனடாவில் உயர் கல்வி படிக்கச் சென்ற இந்தியர்களுக்கு புதிய சிக்கல் என்ன?

Byadmin

Aug 10, 2026


கனடா

பட மூலாதாரம், Inderjit Singh/Getty

படக்குறிப்பு, கால்கரி மற்றும் எட்மன்டன் நகரங்களில் தங்கள் படிப்பை முடித்த பல சர்வதேச மாணவர்கள், தங்கள் வேலை உரிமம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

    • எழுதியவர், சரப்ஜித் சிங் தாலிவால்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கனடாவின் ஆல்பெர்டா மாகாணத்தில் உள்ள கால்கரி மற்றும் எட்மான்டன் நகரங்களில் தங்களின் படிப்பை முடித்த பல சர்வதேச மாணவர்கள் (பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்) தங்களின் படிப்பிற்குப் பிந்தைய வேலை உரிமம் ரத்து செய்யப்பட்டதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனடா அரசின் குடிவரவு துறை தங்களின் மனுக்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனப் பல சர்வதேச மாணவர்கள் கோரி வருகின்றனர்.

மறுபுறம் சர்வதேச மாணவர்கள் விவகாரம் கனடா மற்றும் இந்திய அரசியலிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இருப்பினும், கனடாவின் ஆல்பெர்டா மாகாணத்தின் பிரீமியரான டேனியல் ஸ்மித், கனடாவுக்கு வந்துள்ள சர்வதேச மாணவர்கள், நிரந்தர வதிவுரிமை (பி.ஆர்) இல்லையென்றாலும் விசாக்கள் காலாவதியாகிறது என்றாலும் நாட்டைவிட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.

2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கனடாவின் தலைமை தணிக்கையாளர் (Auditor General of Canada) கொடுத்த அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் சர்வதேச மாணவர்களில் இந்தியர்களின் பங்கு 8.1% ஆக இருந்தது. இது 2023-ஆம் ஆண்டில் 51.6 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

By admin