• Wed. Oct 21st, 2026

24×7 Live News

Apdin News

கனடாவை பிரிய மறுத்த ஆல்பர்ட்டா: மார்க் கார்னிக்கு கிடைத்த வெற்றி, டிரம்புக்கு விடுக்கப்பட்ட செய்தி என்ன?

Byadmin

Oct 21, 2026


கனடா, ஆல்பர்ட்டா மாகாணம், வாக்கெடுப்பு, அமெரிக்கா, 'என்றென்றும் கனடியர்' பிரசாரம்
படக்குறிப்பு, ‘என்றென்றும் கனடியர்’ பிரசாரம்

    • எழுதியவர், லைஸ் டூசெட்
    • பதவி, தலைமை சர்வதேச செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கடந்த வாரம், ஆல்பர்ட்டா மாகாணத்தின் கால்கரி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனடா பிரதமர் மார்க் கார்னி உரையாற்றினார். சிவப்பு, வெள்ளை நிறங்களில் ‘என்றென்றும் கனடியர்’ (Forever Canadian) என்ற பதாகைகள் பின்னணியில் இடம்பெற்றிருந்த மேடையில் நின்று, உற்சாகமாகக் கூடியிருந்த மக்களிடம், “கனடாவுக்கு இது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து வாக்களியுங்கள்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அவரது வேண்டுகோளுக்கு வாக்காளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகத் தெரிகிறது. முதற்கட்ட முடிவுகளின்படி, ஆல்பர்ட்டா மாகாண வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானோர், கனடாவின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், கனடாவின் கூட்டமைப்பின் எதிர்காலம், அதன் வளமிக்க மாகாணமான ஆல்பர்ட்டாவுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது.

கனடாவின் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புகளில் பெரும்பகுதியைக் கொண்டுள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில், ஏராளமான இயற்கை எரிவாயு மற்றும் கனிம வளங்களும் உள்ளன. அமெரிக்காவுடனான கடுமையான வர்த்தகப் போரின் பாதிப்புகளில் இருந்து கனடா மீண்டு வருவதற்கான முயற்சியில் இந்த மாகாணம் முக்கியப் பங்கு வகிக்கிறது. வர்த்தகத்தைப் பல்வகைப்படுத்துவது, பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, உலகின் மறுபுறத்தில் உள்ள நாடுகளுடன் புதிய கூட்டணிகளை உருவாக்குவது ஆகியவை இந்த முயற்சியின் முக்கிய அம்சங்களாகும்.

ஆல்பர்ட்டா மாகாணத்தில் வளர்ந்தவரும், முன்பு மத்திய வங்கியின் தலைவராகப் பணியாற்றியவருமான கார்னி, இப்போது கனடாவை மறுகட்டமைக்கும் முக்கியப் பொறுப்பை ஏற்றுள்ளார். நாட்டுக்குள்ளும் சர்வதேச அளவிலும் கனடாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

By admin