• Wed. Oct 21st, 2026

24×7 Live News

Apdin News

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் 300,000க்கும் மேற்பட்ட அமெரிக்க விசாக்கள் ரத்து: வெளியுறவுத்துறை தகவல்

Byadmin

Oct 21, 2026


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் இதுவரை 300,000க்கும் மேற்பட்ட அமெரிக்க விசாக்களை ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை தொடர்பான உத்தியோகபூர்வ விபரங்களை அந்நாட்டின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, கடந்த சில வாரங்களில் விசாக்கள் ரத்து செய்யப்படும் வேகம் கணிசமாக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. குறிப்பாக, 2025 ஜனவரி மாதம் முதல் தற்போது வரை ரத்து செய்யப்பட்ட விசாக்களின் எண்ணிக்கை மாத்திரம் 175,000 க்கும் அதிகமாக காணப்படுவதாக வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தனது நிர்வாகத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் கடுமையான குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் நாடு கடத்தும் செயற்பாடுகள் ஆகியவை நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை பலப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும், இத்தகைய கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சட்ட ரீதியான நடைமுறைகளையும் பேச்சுரிமையையும் அப்பட்டமாக மீறுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அத்துடன், இந்நடவடிக்கைகளில் குறிப்பாக இனப் பாகுபாடு காட்டப்படுவதாகவும் அவர்கள் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

By admin