• Wed. Oct 21st, 2026

24×7 Live News

Apdin News

மறைந்த ராணி எலிசபெத்துக்கு ஸ்கொட்லாந்தில் 1.4 மில்லியன் பவுண்கள் செலவில் நினைவிடம்

Byadmin

Oct 21, 2026


மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் நினைவாக, ஸ்கொட்லாந்தில் 1.4 மில்லியன் பவுண்கள் செலவில் நிரந்தர நினைவிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவிடத்தின் வடிவமைப்பு, அமையவுள்ள இடம், அதன் அளவு மற்றும் நோக்கம் ஆகியவை தொடர்பான தமது கருத்துகளையும் யோசனைகளையும் சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கென பிரத்தியேக இணையத்தளம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி வரை தமது கருத்துகளை அதில் பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த ராணி எலிசபெத்துக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் காணப்பட்ட வரலாற்று ரீதியான வலுவான தொடர்பை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சரவைச் செயலாளர் மேரி மெக்கலன், இந்த உன்னத திட்டத்தை முழுமையாக வடிவமைப்பதற்கு பலதரப்பட்ட தரப்பினரதும் யோசனைகளும் பங்களிப்புகளும் அவசியமானவை என்றும் எனவே, பொதுமக்கள் பெருமளவில் முன்வந்து தமது கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

By admin