• Sun. Aug 2nd, 2026

24×7 Live News

Apdin News

கனிம வளம்: தமிழ்நாடு அரசு 3 மாத தடையை நீட்டிக்குமா? அல்லது விலக்குமா? பகுப்பாய்வு

Byadmin

Aug 2, 2026


தமிழ்நாடு, கேரளா, கனிம வளங்கள் தடை, விஜய், தவெக அரசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களைக் கொண்டு செல்வதற்கு தமிழ்நாடு அரசு 3 மாத காலம் தற்காலிகத் தடை விதித்துள்ளது.

மாநிலத்திற்குள் கனிமங்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும், சூழலியலைப் பாதுகாக்கவும், கனிமங்களின் சட்டவிரோத சுரங்கம் மற்றும் போக்குவரத்தைத் தடுக்கவும் தற்காலிகமாக தடை செய்திருப்பதாக இதற்கான உத்தரவில் தமிழ்நாடு அரசு விளக்கியுள்ளது.

இந்த நடவடிக்கையை வரவேற்கும் கட்டுமானத்துறையினர், இதனால் தமிழ்நாட்டில் எம்.சேண்ட், ஜல்லி உள்ளிட்ட பொருட்களின் விலை குறையுமென்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்தத் தடை தேவையற்றது என்றும், பொய்யான குற்றச்சாட்டுகளை நம்பி இந்தத் தடையை ஏற்படுத்தி இருப்பதாகவும் தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சின்னச்சாமி கூறியுள்ளார்.

இந்தத் தடையை நீக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கேரள முதலமைச்சர் சதீஷன் கடிதம் எழுதியுள்ளார்.

By admin