• Fri. Jun 5th, 2026

24×7 Live News

Apdin News

கமல் – எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூட்டணியில் காலத்தால் அழியாத 20 பாடல்கள் எவை?

Byadmin

Jun 5, 2026


பாடும் நிலா, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பட மூலாதாரம், SP Charan

    • எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

‘பாடும் நிலா’ என பாசமாக அழைக்கப்படும் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இந்தியளவில் பல ஹீரோக்களுக்கு அவர் பாடியிருந்தாலும் கமல்ஹாசனுக்கும் அவருக்குமான பாசம், சினிமா பிணைப்பு மற்றவர்களை கொஞ்சம் அதிகம்.

எஸ்பிபியை கமல்ஹாசன் அன்னய்யா என பாசமாக அழைப்பார்.

அவர் குறித்து கமல்ஹாசன் அண்மையில் பேசுகையில், ‘இல்லாமற் போயும் இருந்துகொண்டே இருப்பவர் என் அன்னய்யா எஸ்.பி. பாலசுப்ரமணியம்” என உருக்கமாகக் குறிப்பிட்டு இருந்தார்.

”எப்போது முதன்முதலில் உங்கள் தாயையோ அல்லது சகோதரரையோ பார்த்தீர்கள்? என்று கேட்பது போலத்தான் எஸ்பிபியை நான் முதலில் எப்போது பார்த்தேன் என சுத்தமாக நினைவில் இல்லை. நான் அவரைப் பார்ப்பதற்கு முன்பே அவரது குரலைக் கேட்டேன்.” என கமல்ஹாசன் பேசியிருந்தார்.

”அவர் மிகவும் பிஸியான பாடகராக இருந்தார். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை கன்னடப் பாடல்களுக்காக ஒதுக்கி வைப்பார். வழக்கமாக அவர் ஒரு நாளைக்கு எட்டுப் பாடல்களைப் பாடுவார், ஆனால் ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர் என்னை அழைத்து, 12 பாடல்களைப் பாடியதாக சொன்னார். கோவிட் அவரைத் தாக்காமல் இருந்திருந்தால், அவர் தினமும் பாடிக்கொண்டிருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றும் பேசியிருக்கிறார் கமல்ஹாசன்.

By admin