• Fri. Aug 14th, 2026

24×7 Live News

Apdin News

கமல் நடிப்பில் மகள் ஸ்ருதி முதல் உடன் பணிபுரிந்தவர்களுக்கு பிடித்த படங்கள்

Byadmin

Aug 14, 2026


கமல்ஹாசன்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

திரைத்துறையில் தனது 67வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில கதாபாத்திரங்களுக்காக அவர் தனது தோற்றம், உடல்மொழி மற்றும் நடிப்பு முறையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரால் கவனம் பெற்ற சில கதாபாத்திரங்கள் குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.

ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டபோது, ”சந்தான பாரதி இயக்கிய மகாநதி, அப்பா (கமல்) இயக்கி நடித்த விருமாண்டி, ஹேராம் மற்றும் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய புஷ்பக், அபூர்வ சகோதரர்கள் ஆகியவை நான் மிகவும் ரசித்த படங்கள்” என்கிறார்.

‘மாறுபட்ட தோற்றத்தில் அசத்திய கமல்’

களத்தூர் கண்ணம்மா, சகலகலா வல்லவன்,கமல்ஹாசன்

பட மூலாதாரம், Getty Images

ஏ.வி.எம் ஸ்டுடியோ குழுமத்தை சேர்ந்த அருணாகுகனிடம் கமல்ஹாசன் நடித்த படங்கள் குறித்து பிபிசி தமிழ் கேட்ட போது, ”எங்கள் ஏவிஎம். நிறுவனம் தயாரித்த களத்தூர் கண்ணம்மா, சகலகலா வல்லவன் மற்றும் அவருக்கு தேசிய விருது பெற்றுக்கொடுத்த நாயகன், மூன்றாம் பிறை படங்கள் பிடிக்கும். சமீப கால படங்களில் அவர் மாறுபட்ட தோற்றத்தில் சிறப்பாக நடித்த கல்கி 2928 ஏடி’ படங்கள் என்னை கவர்ந்தவை” என்கிறார்.

அபூர்வ சகோதரர்கள், மன்மதலீலை, 16 வயதினிலே: ராசி அழகப்பன்

கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரும், இயக்குனர், எழுத்தாளருமான ராசி அழகப்பனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டபோது, ”எம்ஜிஆருடன் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஆனந்தஜோதி முதல் சலங்கை ஒலி, அவள் அப்படித்தான், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், ஹேராம், மன்மதலீலை, பதினாறு வயதினிலே, நாயகன் ஆகிய பத்து படங்கள் மிகவும் பிடிக்கும்” என்று பட்டியலிட்டார்.

By admin