• Fri. Aug 14th, 2026

24×7 Live News

Apdin News

மே 2025-ஐ விட பலமாக பதிலடி கொடுப்போம் – தண்ணீர் விடாத இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் வார்னிங்

Byadmin

Aug 14, 2026


இந்தியாவுக்கு வார்னிங்

“பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. ஆனால் அமைதியை விரும்புவதை பலவீனமாக எடுத்துக்கொள்ள கூடாது.

கண்ணியத்துடனும் உறுதியுடனும் நாம் அமைதியை நாடுகிறோம். இந்த பிராந்தியத்தில் பாகிஸ்தான் அமைதிக்கான உத்தரவாதமாக விளங்குகிறது.

ஆனால் பாகிஸ்தானின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நீர் உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்தால், மே 2025 இல் கொடுத்ததை விட பலமான பதிலடியை கொடுப்போம்” என எச்சரித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய இந்தியா, ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் செல்லும் நீரை கணிசமாக குறைத்துள்ளது.

இந்த நீரை விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் பாகிஸ்தான் பெருமளவில் நம்பியுள்ளதால், நீரை திறந்துவிடும்படி இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

By admin