• Sat. Apr 18th, 2026

24×7 Live News

Apdin News

கயல் சந்திரன் நடித்துள்ள 'சிங்கா' படத்தின் டீசர் வெளியீடு

Byadmin

Apr 18, 2026


ருத்ரம் சினிமாஸ் சார்பில் அறிமுக இயக்குனர் ராஜதுரை சிங்கம் எழுதி, இயக்கியுள்ள புதிய படம், ‘சிங்கா’. இதில் கயல் சந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார். மலையாள நடிகைகள் சிஜா ரோஸ் மற்றும் மீனாட்சி ரவிந்திரன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி இசையமைக்கிறார்.

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பையும், முறியாத பிணைப்பையும், கொண்டாடும் இதயத்தை வருடும் குடும்பக் கதையாக சிங்கா உருவாகி இருக்கிறது. இப்படம் உணர்ச்சி, நம்பிக்கை, காதல், ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலவையாக குடும்பம் முழுவதும் ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது.

‘சிங்கா’ எனும் அன்பான லாப்ரடார் நாய் தனது அழகிய அரவணைப்பினாலும், ஆழமான உணர்வுகளாலும் அனைவரின் மனங்களையும் நிச்சயம் கவருவான். மனிதனுடன் பகிரும் நட்பின் மூலம் அன்பு, நம்பிக்கை, வாழ்க்கைப் பயணம் ஆகியவை எவ்வாறு மலர்கின்றன என்பதைக் காட்டும் கதை இது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், சிங்கா படத்தின் டீசர் இன்று வெளியானது. இந்த டீசர் மக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்று வருகிறது.

By admin