• Tue. May 26th, 2026

24×7 Live News

Apdin News

‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியது என்ன?

Byadmin

May 26, 2026


கரப்பான் பூச்சி ஜனதா கட்சி,  தலைமை நீதிபதி சூரியகாந்த்

பட மூலாதாரம், CJP & Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி விவகாரத்தை மிகவும் உணர்வுபூர்வமாக அணுக வேண்டாம் என்று மனுதாரர் ஒருவரிடம் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் திங்களன்று கூறினார்.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அவசரமாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

லைவ் லா இணையதளத்தின் தகவலின்படி, கரப்பான் பூச்சி குறித்த தனது கருத்துக்களுக்கு தலைமை நீதிபதி விளக்கம் அளித்த போதிலும், ‘ஒரு தவறான மற்றும் தீங்கிழைக்கும் பிரசாரம்’ தொடர்ந்து நீடித்து வருவதாக வழக்கறிஞர் என்.கே. கோஸ்வாமி வாதிட்டார்.

அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் “இதை இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று வழக்கறிஞரிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கை தற்போது உடனடியாக விசாரிப்பதற்கான தேவை ஏதுமில்லை என்றும், உரிய நேரத்தில் இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

By admin