• Wed. Jun 3rd, 2026

24×7 Live News

Apdin News

கருத்தடை செய்துகொண்ட முன்னாள் நக்சல்கள் பெற்றோராக மாறுவது எப்படி?

Byadmin

Jun 3, 2026


Mother, Children, Bond, Naxalite, Pregnancy

பட மூலாதாரம், BHAGYASHREE RAUT

படக்குறிப்பு, மந்தா தார்பெட்டிக்கு இப்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்; அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

    • எழுதியவர், பாக்கியஸ்ரீ ராவத்
    • பதவி, பிபிசி மராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“மற்றவர்களின் குழந்தைகளைப் பார்க்கும்போது, எனக்கும் ஒரு குழந்தை இருந்தால் அதை அழைத்துச் செல்வேன், அதன் மீது அன்பு பொழிவேன், கொஞ்சி மகிழ்வேன் என்று தோன்றும்.”

தன் வீட்டு முற்றம், மரத்தடியில் அமர்ந்தபடி மந்தா தார்பெட்டி, தான் தாய்மையடைய எவ்வளவு ஏங்கினேன் என்பதை விவரிக்கிறார்.

மந்தா ஒரு முன்னாள் நக்சலைட். தற்போது மகாராஷ்டிராவின் கட்சிரோலியில் வசித்து வருகிறார். நான்கு அறைகள் கொண்ட கான்கிரீட் வீட்டை அவர் கட்டியுள்ளார். வீட்டிற்கு அருகிலுள்ள நர்சரியில் வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

சரணடைந்த பிறகு, தம்பதிகளாக வாழ்வதைத் தாண்டி, குழந்தைகளுடன் ஒரு முழுமையான குடும்பமாக வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், நக்சல் இயக்கத்தில் இருந்தபோதே தனது கணவருக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால், அது சாத்தியமில்லை என்றே அவர் கருதியிருந்தார்.

இருப்பினும், இன்று மந்தாவின் தாய்மை கனவு நனவாகியுள்ளது. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர், மகிழ்ச்சியான குடும்பமாக அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கட்சிரோலி காவல் துறையின் ‘பிராஜெக்ட் சஞ்சீவனி’ திட்டத்தின் கீழ், அவரது கணவர் கிருஷ்ணாவிற்கு கருத்தடை அறுவை சிகிச்சையைச் சரிசெய்யும் வாய்ப்பு கிடைத்ததால் இது சாத்தியமானது.

By admin