• Thu. May 14th, 2026

24×7 Live News

Apdin News

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு மாதம் கழித்து இறந்த சிறுமி – என்ன நடந்தது?

Byadmin

May 14, 2026


கரூர், தவெக, தமிழ்நாடு, அரசியல், விஜய் பரப்புரை
படக்குறிப்பு, மதுமிதா என்ற 13 வயது சிறுமி, 2025 நவம்பர் 2 அன்று உயிரிழந்துள்ளார்.

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கரூரில் கடந்த ஆண்டில் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் மதுமிதா என்ற 13 வயது சிறுமி, ஒரு மாதம் கழித்து 2025 நவம்பர் 2 அன்று உயிரிழந்துள்ளார்.

உரிய நேரத்தில் தரமான சிகிச்சை கிடைக்காததால்தான் தங்கள் குழந்தை இறந்ததாக சிறுமியின் பெற்றோர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

‘அந்த சிறுமிக்கு கூட்ட நெரிசலில் மிதிபட்டதால் ஏற்பட்ட ரத்தக்கட்டால் செப்டிக் ஷாக் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக உள்உறுப்புகள் படிப்படியாக செயலிழந்து மரணம் ஏற்பட்டிருக்கலாம்’ என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகள் கிடைத்துள்ள நிலையில், இந்த சிறுமியின் இறப்புக்கு இதுவரை எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை.

தங்கள் குழந்தையின் இறப்பு குறித்த ஆவணங்களை தவெகவினர் வாங்கிச் சென்றதாகவும், அதற்குப்பின் எந்தத் தகவலும் இல்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

By admin