• Thu. May 28th, 2026

24×7 Live News

Apdin News

கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா – பின்னணியில் நடந்தது என்ன?

Byadmin

May 28, 2026


கர்நாடக முதலமைச்சர், சித்தராமையா, டி.கே. சிவக்குமார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, வியாழக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் கர்நாடக முதல்வர் சித்தராமையா. அவருடன் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஜி. பரமேஸ்வரா ஆகியோர் அமர்ந்துள்ளனர்

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கட்சி மேலிடத்திற்கு அளித்த வாக்குறுதியின்படி கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் மேலிடத்தின் பேச்சை ஏற்றுக்கொண்டு தான் பதவி விலகப் போவதாக சித்தராமையா குறிப்பிட்டிருந்தார்.

மாநில முதலமைச்சராக 2013 முதல் 2018 வரை ஐந்து ஆண்டுகள் முழுமையாக முதலமைச்சராகப் பணியாற்றிய சித்தராமையா, மே 20 அன்று தனது இரண்டாவது பதவிக்காலத்தின் மூன்றாண்டுகளை நிறைவு செய்தார்.

ஏஎன்ஐ செய்தி முகமையின்படி, சித்தராமையா தனது ராஜிநாமா கடிதத்தை கர்நாடக ஆளுநரின் சிறப்புச் செயலாளர் பிரபு சங்கரிடம் கொடுத்துவிட்டார். ஏனெனில், மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இன்று இரவுதான் வெளியூரில் இருந்து திரும்புகிறார்.

தனது ராஜிநாமாவை அறிவித்த சித்தராமையா, “நான் இன்று எனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

By admin