• Sat. Sep 5th, 2026

24×7 Live News

Apdin News

கற்பித்தலில் ஆசிரியர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் – குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

Byadmin

Sep 5, 2026


குடியரசு தலைவர் வலியுறுத்தல்:

மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்குவது அவர்களின் கடமையாகும். அர்ப்பணிப்பும் அக்கறையும் கொண்ட ஒரு ஆசிரியர், மாணவர்களின் தனித்துவமான ஆற்றலை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உத்வேகத்தின் ஊற்றாக திகழ்ந்து, சிறந்து விளங்க அவர்களை ஊக்குவிப்பார்.

ஆசிரியர்கள் தங்கள் அறிவை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு, தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு, புதுமையான கற்பித்தல் முறைகளைக் கையாள வேண்டும். அவர்கள் மாணவர்களிடையே சுயசிந்தனையை ஊக்குவித்து, ஆராயும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்,” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.

By admin