• Sat. Nov 14th, 2026

24×7 Live News

Apdin News

கள்ளக்குறிச்சி: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் – பெண் ஐஏஎஸ் அதிகாரி விவகாரத்தில் இதுவரை என்ன நடந்தது? ஒரு தொகுப்பு

Byadmin

Nov 14, 2026


கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

படக்குறிப்பு, கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் பேசப்படும் விவகாரத்தில் த.வெ.க எம்.எல்.ஏவை கண்டித்து வரும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அ.தி.மு.க அறிவித்துள்ளது.

‘இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ‘த.வெ.க எம்.எல்.ஏ மீது முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க மற்றும் தவெக அரசை ஆதரிக்கும் இடதுசாரிக் கட்சிகள் முன்வைத்துள்ளன.

ஆனால், ‘அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை’ என, எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடந்தது?

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் குறித்து தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் நவம்பர் 9ஆம் தேதி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார்.

அந்தப் பதிவில், ‘பெண் அதிகாரிக்கு த.வெ.க சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் மது போதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் இதைத் தொடர்ந்து பெண் அதிகாரிக்கு தனி பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன’ எனக் கூறியுள்ளார்.

By admin