• Mon. Oct 5th, 2026

24×7 Live News

Apdin News

கவிஞர் புலமைப்பித்தன் எழுதிய 10 பிரபல தமிழ் சினிமா பாடல்களின் தொகுப்பு

Byadmin

Oct 5, 2026


கவிஞர் புலமைப்பித்தன், கோலிவுட், பாடலாசிரியர், சினிமாப் பாடல்கள், திரையிசைப் பாடல்கள்

படக்குறிப்பு, கவிஞர் புலமைப்பித்தன்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

”அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே…

சுகம் பல தரும் தமிழ்ப்பா…

சுவையொடு கவிதைகள் தா…தமிழே நாளும் நீ பாடு!”

இளையராஜாவுக்குப் பிடித்தமான பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர், மறைந்த கவிஞர் புலமைப்பித்தன்.

கோவை சூலூர் அருகேயுள்ள பள்ளபாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த புலமைப்பித்தனின் சொந்தப்பெயர் ராமசாமி. நடிகர் சிவகுமார், மறைந்த இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் படித்த அதே சூலூர் அரசுப் பள்ளியில் படித்த ராமசாமி, பேரூர் தமிழ்க்கல்லூரியில் தமிழ் பயின்று சென்னை சாந்தோம் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

By admin