• Fri. Apr 17th, 2026

24×7 Live News

Apdin News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல் – கலெக்டர் அறிவிப்பு

Byadmin

Apr 17, 2026


காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற தோ்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். எனவே, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003, விதி12 (2) ன் படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள பார்கள் வருகிற 21-ந்தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 23-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ந்தேதி ஆகிய 4 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்ற எப்.எல்.- 2 முதல் எப்.எல்.-11 வரை (எப்.எல்.-6 தவிர) உரிமம் பெற்ற ஓட்டலுடன் கூடிய மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் ஆகியவை மேற்கண்ட நாட்களில் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By admin