6
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வரும் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
மொத்தம் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA), நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்காளர்களை அணுகி வருகின்றன.
இதற்கிடையில், தேர்தல் காலங்களில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்தும் நோக்கில், தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வப்போது, பிரசாரத்திற்காக பயணம் செய்யும் அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்கள் மட்டுமல்லாமல், அவர்கள் பயன்படுத்தும் ஹெலிகாப்டர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், உதகை பகுதியில் தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு பயணித்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.