• Fri. Sep 11th, 2026

24×7 Live News

Apdin News

காஞ்சிபுரம்: ரூ.20 ஆயிரம் முன்பணத்துக்காக மருத்துவமனைக்கு அனுப்பாததால் கர்ப்பிணி மரணமா?

Byadmin

Sep 11, 2026


உயிரிழந்த பழங்குடியின பெண் குடும்பத்துடன் வசித்து வந்த கொட்டகை.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, உயிரிழந்த பழங்குடியின பெண் குடும்பத்துடன் வசித்து வந்த கொட்டகை.

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

காஞ்சிபுரத்தில் பழங்குடி கர்ப்பிணிப் பெண் மரணம் தொடர்பாக தனியார் மரக்கிடங்கு உரிமையாளர் மீது வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 10) எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

’20 ஆயிரம் ரூபாய் முன்பணத்துக்காக, எனது மனைவியை பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு மரக்கிடங்கு உரிமையாளர் அனுமதிக்கவில்லை’ எனப் புகார் மனுவில் இறந்த பெண்ணின் கணவர் கூறியுள்ளார்.

சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த மரக்கிடங்கு உரிமையாளரின் கருத்தை பெறுவதற்கு பிபிசி தமிழ் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

உயிரிழந்த தேன்மொழி

பட மூலாதாரம், Kanchi Makkal Manram

படக்குறிப்பு, உயிரிழந்த தேன்மொழி

கொத்தடிமை முறையால் பெண் இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக, பிபிசி தமிழிடம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தி.சினேகா தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில் சிங்காடிவாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு இருளர் குடியிருப்பில் வசித்து வரும் ஆனந்தன், தனது மனைவி தேன்மொழியுடன் வெள்ளை கேட் என்ற இடத்தில் உள்ள மரக்கிடங்கில் வேலை பார்த்து வந்துள்ளார்.

By admin