• Sat. May 9th, 2026

24×7 Live News

Apdin News

கான் சிட்டி படத்தின் இரண்டாவது பாடலான ‘நான்தான் கிங்’ இன்று மாலை வெளியீடு

Byadmin

May 9, 2026


பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி உள்ள படம் ‘கான் சிட்டி’ (Con City). இப்படத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ், நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகி பாபு, மூத்த நடிகை வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் கடனில் சிக்கித்தவிக்கும்போது அவரது கையில் பட்டன் தட்டினால் பணம் கொட்டும் இயந்திரம் ஒன்று தென்படுகிறது. இந்த இயந்திரம், கணவன், மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் கிடைக்க இதன்பின் நடைபெறும் சம்பவங்களே படமாக்கப்பட்டுள்ளது.

புதுமையான கதைக்களத்துடன் ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இந்த நிலையில், ‘கான் சிட்டி’ படத்தின் இரண்டாவது பாடலான ‘நான்தான் கிங்’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

By admin