• Sat. May 9th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவில் ஒன்றாக பணிபுரிந்த சகோதரிகள் பல ஆண்டுகள் கழித்து பிறப்பின் ரகசியம் அறிந்த கதை

Byadmin

May 9, 2026


குழந்தையாக தத்துக் கொடுக்கப்பட்ட சகோதரிகள் ஒரு டாட்டூ மூலம் ஒன்று சேர்ந்தது எப்படி?

பட மூலாதாரம், Julia Tinetti

படக்குறிப்பு, கசாண்ட்ரா மேடிசன் (இடது) மற்றும் ஜூலியா டினெட்டி(வலது) முதலில் சந்தித்தபோது அவர்கள் சகோதரிகள் என்பதை அறிந்திருக்கவில்லை

ஜூலியா டினெட்டி, கசாண்ட்ரா மேடிசன் ஆகியோரின் வாழ்க்கையில் பல ஒற்றுமைகள் இருந்தன. ஒரே மதுபான விடுதியில் பணியாற்றிய போது சந்தித்த இவர்கள் விரைவில் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். ஆனால் அந்த நேரத்தில், அவர்கள் உண்மையில் எவ்வளவு ஆழமாகப் பிணைக்கப்பட்டு இருந்தார்கள் என்பது அவர்களுக்கே தெரிந்திருக்கவில்லை.

இரு பெண்களும் 1990களில் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் வளர்ந்தனர். அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை என்றாலும், அவர்கள் இருவரும் சுமார் 15 நிமிட பயண தூரத்தில்தான் வசித்து வந்தனர். இதில் மற்றுமோர் ஆச்சரியமான ஒற்றுமை என்னவெனில், அவர்கள் இருவருமே தத்தெடுக்கப்பட்டவர்கள்.

குழந்தையாக இருந்தபோது, கசாண்ட்ரா மேடிசன் அடிக்கடி தன்னைப் பெற்ற தாய் குறித்து நினைத்து, ஒரு நாள் அவரைச் சந்தித்தாக வேண்டுமெனக் கனவு கண்டார். தனது புன்னகையையோ அல்லது கண்களையோ தன்னைப் பெற்ற தாயிடம் இருந்து பெற்றாரா என்று அவர் சிந்தித்ததுண்டு. உயிரியல் ரீதியிலான தனது குடும்பம் முதலில் கரீபியனில் இருந்த டொமினிகன் குடியரசில் இருந்து வந்தவர்கள் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது.

“அவர்கள் மிகவும், மிகவும், மிகவும் ஏழைகளாக இருந்ததால், என்னைத் தத்துக் கொடுக்க முடிவு செய்தனர். என்னை வளர்க்கும் அளவுக்கு அவர்களிடம் வசதி இருக்கவில்லை,” என்று மேடிசன் கூறினார்.

மேடிசன் ஓர் இளம் பெண்ணாக வளர்ந்தபோது, தனது உயிரியல் ரீதியான குடும்பத்தைக் கண்டுபிடிக்க கடுமையாக முயன்றார். ஆனால் அவரிடம் பிறப்புச் சான்றிதழ் இருக்கவில்லை. பல முயற்சிகள் செய்தும், அவரால் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

By admin