• Sun. Nov 15th, 2026

24×7 Live News

Apdin News

காவல் நிலையங்களில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் – ஜவாஹிருல்லா

Byadmin

Nov 15, 2026


காவல் நிலையங்களில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதைத் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், காவல் நிலைய வளாகத்திலேயே தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின . விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட் கைதி உயிரிழந்த விவகாரம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்படு சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனார், இந்த நிலையில் னிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலை தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

பாலகிருஷ்ணன் ஓட்டிச் சென்ற லாரி தீப்பிடித்த சம்பவம் தொடர்பாக அவரது புகாரின் அடிப்படையில் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே, அந்த லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட ஏலக்காய் மூட்டைகளில் 67 மூட்டைகள் குறைவாக இருப்பதாகவும், வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவிகளின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் கூரியர் நிறுவனம் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தது.

இந்தப் புகார் தொடர்பான விசாரணைக்காகச் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு வந்திருந்த பாலகிருஷ்ணன், அங்குள்ள கழிப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு காவலர்கள் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர், காவல்துறையினரின் பாதுகாப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கும்போது உயிரிழந்துள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற காவல்துறையின் விளக்கத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு இந்தச் சம்பவத்தைக் கடந்து செல்ல முடியாது.

பாலகிருஷ்ணனின் மரணத்திற்கு காவல்துறையினரே காரணம் என்று அவரது குடும்பத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது

அவரது மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் அனைத்தும் வெளிக்கொணரப்பட வேண்டும். சிபிசிஐடி விசாரணை எவ்விதத் தலையீடுமின்றி நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

நாகர்கோவில் காவல் நிலைய மரணத்தைத் தொடர்ந்து தற்போது செக்கானூரணி காவல் நிலைய மரணம் நிகழ்ந்திருப்பது தமிழ்நாட்டில் காவல் நிலைய மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதையே வெளிப்படுத்துகிறது. காவல் நிலையங்கள் பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதி செய்ய வேண்டிய இடங்களாக இருக்க வேண்டுமே தவிர, உயிருக்கு உத்தரவாதமற்ற அச்சத்தின் கூடாரங்களாக மாறிவிடக் கூடாது.

இதற்கிடையே, கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ஏழு இளம் பெண்கள் உட்பட 12 பேர் காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள தகவலும் கவலையளிக்கிறது. ஒருபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், மறுபுறம் காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் எனப் பொதுமக்கள் அச்சத்துடனும் பாதுகாப்பற்ற உணர்வுடனும் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

காவல்துறையின் பொறுப்புணர்வையும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வையும் உறுதி செய்வதற்குத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவல் நிலைய மரணங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் சுதந்திரமான விசாரணை நடத்தப்படுவதுடன், தவறு செய்த காவல்துறையினர் எத்தகைய பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

காவல் நிலையங்களில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் ஒவ்வொரு குடிமகனின் உயிருக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்படுவதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

என்று தெரிவித்துள்ளார்.

By admin