• Thu. Oct 15th, 2026

24×7 Live News

Apdin News

கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் என்றால் என்ன? விஜயின் ஆந்திர பயணம் தமிழ்நாட்டுக்கு பலன் தருமா?

Byadmin

Oct 15, 2026


'சென்னைக்கு கூடுதல் நீர், நதிகள் இணைப்பு' - விஜயின் ஆந்திரப் பயணம் பலனளிக்குமா?

படக்குறிப்பு, கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு கூடுதல் நீரை வழங்குவது தொடர்பான கடிதத்தை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அக்டோபர் 13ஆம் தேதி விஜயவாடாவுக்கு பயணித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும், கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு கூடுதல் நீரை வழங்க வேண்டும் என்கிற இரண்டு விஷயங்கள்தான் இந்தப் பயணத்தின் பின்னணியாக அமைந்தது. இது தொடர்பான கடிதத்தை சந்திரபாபு நாயுடுவிடம் விஜய் அளித்தார்.

தமிழ்நாடு, ஆந்திரா இடையே தெலுங்கு கங்கை ஒப்பந்தத்தின் கீழ் கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

கோதாவரி – காவிரி திட்டம் தொடர்ந்து பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டைவிட ஆந்திராவுக்கே பலன்கள் அதிகம் என்கிறார் தமிழ்நாடு பொதுப் பணித் துறையின் ஓய்வுபெற்ற சிறப்பு தலைமைப் பொறியாளரான அ.வீரப்பன்.

இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இது தமிழ்நாட்டுக்கு பின்னடைவாக அமைந்துவிடக் கூடாது என்கிறார் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர் பாண்டியன்.

By admin