• Tue. Oct 13th, 2026

24×7 Live News

Apdin News

கிரேக்க கடவுள் ‘அப்ரோடைட்டி’ காதல், காமத்தின் அடையாள அடையாளமாக மாறிய கதை

Byadmin

Oct 13, 2026


பண்டைய கிரேக்க தெய்வமான 'அப்ரோடைட்டி' சர்ச்சைக்குரிய அடையாளமாக மாறியது எப்படி?

படக்குறிப்பு, கலையில் சித்தரிக்கப்பட்ட விதத்தின் காரணமாக, அழகின் தேவதை பல நூற்றாண்டுகளாக ஒரு சர்ச்சைக்குரிய ஆளுமையாக இருந்து வருகிறார். லண்டனில் உள்ள நேஷனல் கேலரியில் உள்ள டியாகோ வெலாஸ்கஸின் “வீனஸ் அட் ஹர் மிரர்” என்ற ஓவியம்.

    • எழுதியவர், மேத்யூ வில்சன்
    • பதவி, பிபிசி கல்ச்சர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பண்டைய கிரேக்கக் காதல் மற்றும் அழகின் தெய்வமான அப்ரோடைட்டியை உருவகப்படுத்தும் கலைப் படைப்புகள், பெண் உடலைத் தவறான முறையில் காட்சிப்படுத்துவதாகக் கூறி நீண்ட காலமாகவே ஆபாசமானவை என விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இவர் கலை வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய நபர்களில் ஒருவராக எப்படி மாறினார்?

அப்ரோடைட்டியின் (பண்டைய ரோமானியர்களால் வீனஸ் என அழைக்கப்பட்டவர்) நிர்வாண வடிவம் பல நூற்றாண்டுகளாக விவாதத்திற்குரிய விஷயமாக இருந்து வருகிறது.

1880-ஆம் ஆண்டில், எழுத்தாளர் மார்க் ட்வைன், டிட்டியனின் ‘வீனஸ் ஆஃப் உர்பினோ’ (1534) ஓவியத்தைக் கண்டு அதை “உலகிலேயே மிகவும் அருவருப்பான, வக்கிரமான மற்றும் ஆபாசமான ஓவியம்” என்று வர்ணித்தார்.

1914-ஆம் ஆண்டில், பெண்களுக்கு வாக்குரிமை கோரி போராடிய மேரி ரிச்சர்ட்சன், லண்டனின் தேசிய கேலரியில் இருந்த டியேகோ வெலாஸ்குவெஸின் ‘வீனஸ் அட் ஹர் மிரர்’ (அல்லது ‘ரோக்பி வீனஸ்’, தோராயமாக 1647-1651) ஓவியத்தை கறிவெட்டும் கத்தியால் குறைந்தது மூன்று முறை தாக்கி சேதப்படுத்தினார்.

“நாள் முழுவதும் ஆண்கள் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை என்னால் தாங்க முடியவில்லை,” என்பது அவர் பின்னர் அளித்த விளக்கங்களில் ஒன்றாகும்.

By admin