• Wed. Oct 14th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் அரிசி தட்டுப்பாடு என்பது உண்மையா? அரிசி விலை கிடுகிடு உயர்வு

Byadmin

Oct 13, 2026


தமிழ்நாட்டில் அரிசி தட்டுப்பாடு :  உண்மையா? வதந்தியா?

தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு நிலவுவதாக சமூக ஊடக தளங்கள் பலவற்றிலும் தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் சில இடங்களில் மக்கள் அரிசியை அதிக அளவில் வாங்கி இருப்பு வைக்கவும் தொடங்கி உள்ளனர். ஆனால், அரிசி தட்டுப்பாடு உண்மையிலேயே நிலவுகிறதா?

மாநிலத்தில் அரிசியே கிடைக்காத நிலை ஏற்படவில்லை என்று அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். உற்பத்தி குறைந்துள்ள குறிப்பிட்ட வகை அரிசி மட்டுமே சந்தையில் குறைவாக கிடைப்பதாகவும், மற்ற வகை அரிசி வகைகள் எப்போதும் போல் கிடைத்து வருகின்றன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மக்கள் பெரும்பாலும் சாப்பிடுவது சன்ன ரக அரிசியை தான். சன்ன ரகம் என்பது பார்ப்பதற்கு மெல்லிதாக இருக்கும், சமைத்தால் மென்மையாக இருக்கும், கையில் ஒட்டாது. தமிழ்நாட்டில் அதிகம் தேவைப்படும் இந்த அரிசி பெரும்பாலும் அண்டை மாநிலங்களிலிருந்தே வாங்கப்படுகின்றன.

“சன்ன ரக அரிசி தேவையில் சுமார் 30% மட்டுமே தமிழ்நாட்டிலிருந்து பூர்த்தி ஆகிறது. சுமார் 70% தேவை, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஆகிய மாநிலங்களிலிருந்து பெறப்பட்டு, பூர்த்தி செய்யப்படுகின்றன” என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் தினேஷ் குமார்.

அட்சயா, அம்மன் சோனா, ஆர்என்ஆர் ஆகியவை மாநிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சன்ன ரக அரிசி வகைகள் ஆகும்.

By admin