• Tue. Oct 13th, 2026

24×7 Live News

Apdin News

நடிகர் அருண் கார்த்தி நடிக்கும் ‘பனி விழும் இரவு’ படத்தின் பாடல் வெளியீடு

Byadmin

Oct 13, 2026


தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்திற்காக கடுமையாக உழைத்து வரும் நடிகர் அருண் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பனி விழும் இரவு’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘காபி டே காதல்’ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

கலாச்சாரம் காண்

இயக்குநர் எஸ். ஆர். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பனி விழும் இரவு ‘ திரைப்படத்தில் அருண் கார்த்தி, இனாக்ஷி கங்குலி, சரவணன் சக்தி, சேரன் ராஜ், கஜராஜ், ‘உறியடி ‘ சுருளி, வினோத் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதா முருகன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பவி கிரியேஷன்ஸ் மற்றும் வேல் இன்போடெய்ன்மென்ட் கிரியேட்டிவ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சதா முருகன்- தங்கவேல் வள்ளலார் சாமி- ஓம் செல்வா- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இப்படத்தில் இடம்பெற்ற  ‘ யார் இணை அகலுவார் யார் மனம் யார் கொல்லுவார்..’ எனத் தொடங்கும் பாடலும் , பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர்கள் சதா முருகன் மற்றும் சந்தோஷ் ஆறுமுகம் எழுத பின்னணி பாடகர் வல்லவன் மற்றும் பின்னணி பாடகி காவ்யா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

மெல்லிசையாக உருவாகி இருக்கும் இந்த பாடல் இசை ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

 

The post நடிகர் அருண் கார்த்தி நடிக்கும் ‘பனி விழும் இரவு’ படத்தின் பாடல் வெளியீடு appeared first on Vanakkam London.

By admin