• Mon. Oct 5th, 2026

24×7 Live News

Apdin News

கிறிஸ்டா பைக்: அமெரிக்காவில் 2 முறை மரண ஊசி செலுத்தியும் உயிர்பிழைத்த பெண் – 500 மரண தண்டனைகளை நேரில் பார்த்த நபர் கூறுவது என்ன?

Byadmin

Oct 5, 2026


கிறிஸ்டா பைக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்ற டென்னஸி மாகாணம் இரண்டு முறை மரண ஊசி செலுத்தியது; ஆனால் அவர் உயிரிழக்கவில்லை.

படக்குறிப்பு, கிறிஸ்டா பைக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்ற டென்னஸி மாகாணம் இரண்டு முறை மரண ஊசி செலுத்தியது. ஆனால் அவர் உயிரிழக்கவில்லை.

    • எழுதியவர், ஷீலா ஃபிளின்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற சுமார் 500 மரண தண்டனைகளை செய்தியாளராக மைக்கேல் கிராசிக் நேரில் பதிவு செய்துள்ளார். 2018-ஆம் ஆண்டு அசோசியேட்டட் பிரஸ்ஸில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், அவர் மரண தண்டனைகள் குறித்த செய்திகளைத் தொடர்ந்து பதிவு செய்து வந்தார்.

மரண தண்டனை நிறைவேற்றும்போது ஊசி வெளியே வந்த இரண்டு சம்பவங்களை அவர் நினைவுகூர்கிறார். பின்னர் ஊசி மீண்டும் செலுத்தப்பட்டு, மரண தண்டனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், மரண தண்டனைக்குப் பிறகும் கைதி உயிருடன் இருந்த சம்பவத்தை அவர் இதுவரை பார்த்ததில்லை.

ஆனால், கடந்த வாரம் அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் அப்படியொரு சம்பவம் நடந்தது. 50 வயதான கைதி கிறிஸ்டா பைக், மரண தண்டனைக்குப் பயன்படுத்தப்படும் பென்டோபார்பிட்டல் என்ற மருந்தின் இரண்டு தனித்தனி அளவுகள் செலுத்தப்பட்ட பிறகும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தார். அவர் குறட்டை விடும் சத்தமும் கேட்டது.

76 வயதான கிராசிக், இந்த அசாதாரண சம்பவம் குறித்து கேள்விப்பட்டபோது முழுமையாக ஆச்சரியப்படவில்லை என்கிறார்.

டெக்சாஸ் செய்தியாளராக பல தசாப்தங்கள் பணியாற்றியபோதே இதுபோன்ற ஒன்று நடக்கக்கூடும் என்ற சாத்தியம் குறித்து அவர் யோசித்திருந்தார்.

By admin