• Wed. Sep 30th, 2026

24×7 Live News

Apdin News

கிறிஸ்டா பைக்: அமெரிக்காவில் மரண தண்டனை பெற்ற பெண்ணின் கடைசி வேண்டுகோள் என்ன தெரியுமா?

Byadmin

Sep 29, 2026


டென்னசி திருத்தங்கள் துறையின் பதிவின்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான கிறிஸ்டா பைக்கின் புகைப்படம். டென்னசியில் தற்போது மரண தண்டனைப் பிரிவில் உள்ள ஒரே பெண் கைதி இவர்.

படக்குறிப்பு, செப்டம்பர் 30ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், கிறிஸ்டா பைக்கின் தண்டனையை மாற்றக் கோரி அவரது வழக்கறிஞர்கள் கருணை மனு தாக்கல் செய்துள்ளனர்.

அமெரிக்காவின் டென்னஸி மாகாண அரசு, விஷ ஊசி செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்றத் தயாராகி வரும் நிலையில், மரண தண்டனை கைதிகளுக்கான சிறையில் இருந்து கிறிஸ்டா பைக் இந்த வார தொடக்கத்தில் தனது தோழி ஆஷ்லீ செல்லர்ஸுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதுதான் பைக்கிடம் இருந்து செல்லர்ஸ் பெற்ற கடைசி தகவல்.

புதன்கிழமை தனது மரண தண்டனை நிறைவேற்றப்படும்போது, தனது அன்புக்குரியவர்கள் யாரும் அங்கு இருக்க வேண்டாம் என்று தான் விரும்புவதாக செல்லர்ஸிடம் பைக் தெரிவித்தார்.

“நாங்கள் அதைப் பார்ப்பதை அவர் விரும்பவில்லை” என்கிறார் செல்லர்ஸ்.

தான் அறிந்தவரை எப்போதும் கனிவாகவும், பாதுகாப்பானவராகவும் இருந்த இந்தப் பெண்ணும், 31 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவரும் ஒரே நபரென ஏற்றுக்கொள்வது செல்லர்ஸுக்கு கடினமாக இருக்கிறது.

தற்போது 50 வயதாகும் பைக், 18 வயதாக இருந்தபோது, அப்போது தனது காதலனாக இருந்த டடாரில் ஷிப்புடன் சேர்ந்து, 19 வயதான கொலீன் ஸ்லெம்மரை அடித்து, சித்ரவதை செய்து கொலை செய்தார். பிரச்னைக்குரிய இளைஞர்களுக்கான வேலைப் பயிற்சி முகாமில் இருவரும் கொலீனை சந்தித்திருந்தனர்.

By admin