• Wed. Oct 7th, 2026

24×7 Live News

Apdin News

கிறிஸ்டா பைக்: மரண தண்டனையின்போது உயிர் பிழைத்தவரின் இப்போதைய நிலைமை என்ன?

Byadmin

Oct 7, 2026


கிறிஸ்டா

    • எழுதியவர், சரீன் ஹபேஷியன் & க்வாசி கியாம்ஃபி அசியேடு
    • பதவி, ‎
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கடந்த வாரம் மரண தண்டனையை நிறைவேற்றும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், அமெரிக்காவின் மரண தண்டனைக் கைதி கிறிஸ்டா பைக் தற்போது “சுயநினைவுடன் இருப்பதாகவும் பேசுவதாகவும்” அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் கைவிலங்கிடப்பட்ட நிலையில், 50 வயதான பைக் தொடர்ந்து தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக அவரது வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

கடந்த 1995ஆம் ஆண்டு கொலீன் ஸ்லெம்மரை கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பைக், கடந்த புதன்கிழமை டென்னசியில் மரண ஊசி மூலம் மரண தண்டனையை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட இரண்டு முயற்சிகளிலும் உயிருடன் தப்பினார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். செலுத்தப்பட்ட ரசாயனத்தை அவரது உடலில் இருந்து மருத்துவப் பணியாளர்கள் அகற்றிய நிலையில், பல நாள்கள் அவர் சுயநினைவின்றி இருந்தார்.

அவர் தற்போது குணமடைந்து வருவது முன்னெப்போதும் நிகழ்ந்திராத சம்பவம் என்று மருத்துவ நிபுணர்களும் அவரது சட்டக் குழுவினரும் தெரிவித்துள்ளனர். மரண ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னரும் உயிர் பிழைத்த ஒரே நபராக இவர் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அவரது உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை அவரது வழக்கறிஞர்கள் “மருத்துவ ரீதியாக முன்னெப்போதும் நிகழ்ந்திராதது” என்று குறிப்பிட்டுள்ளனர். அதேவேளையில், அவரது உடல்நிலை குறித்த கணிப்பு இன்னும் தெளிவாக இல்லை என்றும், “குறைந்தபட்சம், அவர் நீண்ட காலம் குணமடைய வேண்டியிருக்கும் என எதிர்பார்ப்பதாகவும்” அவர்கள் தெரிவித்தனர்.

By admin