• Fri. Nov 6th, 2026

24×7 Live News

Apdin News

கிறிஸ்டியானோ ரொனால்டோ: போர்ச்சுகல் கேப்டனின் மறக்க முடியாத 7 தருணங்கள்

Byadmin

Nov 6, 2026


கிறிஸ்டியானோ ரொனால்டோ

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கால்பந்து உலகின் முன்னணி வீரர்களுள் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். 41 வயதான ரொனால்டோ, போர்ச்சுகல் அணிக்காக 23 ஆண்டுகள் விளையாடியிருக்கிறார்.

கடந்த 2003ஆம் ஆண்டு போர்ச்சுகல் அணிக்காக அறிமுகமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நாட்டுக்காக மொத்தம் 234 போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். அதில் 146 கோல்கள் அடித்திருக்கிறார். சர்வதேச ஆண்கள் கால்பந்து அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடியதும், அதிக கோல்கள் அடித்ததும் இவர்தான்.

கடந்த இருபது ஆண்டுகளாக உலகம் கொண்டாடிய மிக முக்கிய வீரர்களுள் ஒருவராக விளங்கிய அவர், 2016 யூரோ தொடரை வென்றார். போர்ச்சுகல் அணி கைப்பற்றிய முதல் பெரிய கால்பந்து கோப்பை அதுதான். அதன் பிறகு யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரை 2019, 2025 ஆகிய ஆண்டுகளில் கைப்பற்றினார்.

பல சாதனைகளைப் படைத்திருந்தாலும் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற ஆதங்கம் அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் இருக்கவே செய்கிறது. சில வாரங்களுக்கு முன்பு போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜெசூஸ் உடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக போர்ச்சுகல் பயிற்சி முகாமில் இருந்து விலகியிருந்தார் ரொனால்டோ. அவர்கள் இருவருக்கும் இடையிலான பிரச்னை பெரிதாக, போர்ச்சுகல் கால்பந்து சங்கம் ரொனால்டோவை தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது. இந்த நிலையில், நேற்று (நவம்பர் 5) தனது ஓய்வு முடிவை வீடியோ மூலம் வெளியிட்டிருக்கிறார் அவர்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

சமூக ஊடகத்தில் தான் வெளியிட்ட வீடியோவில், “இது எளிதான முடிவாக இருக்கவில்லை. ஏனென்றால், சில முடிவுகள் மூளையால் மட்டும் எடுக்கப்படுபவை அல்ல. அவை இதயத்தாலும் எடுக்கப்படுகின்றன,” என்று ரொனால்டோ தெரிவித்தார்.



By admin