ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீசின் மரியா சக்காரி, ஆஸ்திரேலியாவின் மரியா ஜாயிண்ட் உடன் மோதினார்.
இதில் முதல் சுற்றில் மரியா ஜாயிண்ட் 6-4 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட மரியா சக்காரி அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-3, 6-3 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா 6-4, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் டெரசா வேலண்டோவாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.