• Sat. May 30th, 2026

24×7 Live News

Apdin News

கில் – சாய் சுதர்ஷன் அதிரடியால் இறுதிப்போட்டிக்கு நுழைந்த குஜராத்

Byadmin

May 30, 2026


53 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து தன் அணியின் வெற்றியை உறுதி செய்தார் சாய் சுதர்ஷன்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 53 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து தன் அணியின் வெற்றியை உறுதி செய்தார் சாய் சுதர்ஷன்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று (மே 29) எதிர்கொண்டது குஜராத் டைட்டன்ஸ். நியூ சண்டிகரில் நடந்த இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை (மே 31) ஆமதாபாத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை குஜராத் டைட்டன்ஸ் எதிர்கொள்ளும்.

இந்த குவாலிஃபயர் 2 போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் தாங்கள் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். முன்னதாக நடந்த இரண்டு பிளே ஆஃப் போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 240+ ஸ்கோர்கள் எடுத்து வெற்றியும் பெற்றிருப்பதால், ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முதலில் பேட்டிங் செய்த ராயல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. வைபவ் சூர்யவன்ஷி 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தார்.

அந்த இலக்கை 18.4 ஓவர்களில் சேஸ் செய்து வெற்றியை உறுதி செய்தது குஜராத் டைட்டன்ஸ். அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 104 ரன்களும், சாய் சுதர்ஷன் 58 ரன்களும் எடுத்தனர்.

By admin