• Sat. Jun 13th, 2026

24×7 Live News

Apdin News

கிளிநொச்சியில் துயரம் | மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

Byadmin

Jun 10, 2026



கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தொழில் செய்து கொண்டிருந்தவேளை சம்பவம்

இன்று காலை தொழில் புரிந்து கொண்டிருந்த நிலையில் இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் துயரம் : மின்சாரம் தாக்கி இளைஞன் பலி | Youth Dies After Being Electrocuted In Kilinochchi

கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுருநாதன் சாரங்கன் என்ற இளைஞனே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சடலம்

உயிரிழந்த இளைஞனின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் துயரம் : மின்சாரம் தாக்கி இளைஞன் பலி | Youth Dies After Being Electrocuted In Kilinochchi

குறித்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கிளிநொச்சியில் துயரம் | மின்சாரம் தாக்கி இளைஞன் பலி appeared first on Vanakkam London.

By admin