• Sun. Sep 13th, 2026

24×7 Live News

Apdin News

குஜராத்: ஒரு மெசேஜ் மூலம் ரூ.1.5 கோடி மோசடி செய்யப்பட்டது எப்படி?

Byadmin

Sep 13, 2026


பாஸ் ஸ்கேம், நிறுவன முதலாளிகளைக் குறிவைக்கும் புதிய வகை இணையவழி மோசடி. அகமதாபாத், காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    • எழுதியவர், ராக்ஸி கட்கேகர் சாரா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஒரு மெசேஜ், ஒரு ஜிப் ஃபைல்… சில மணி நேரத்திலேயே நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 1.5 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் காவல்துறை இந்த குற்றத்தின் பின்னணியைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சைபர் குற்றவாளிகள் நிறுவன முதலாளியின் அடையாளத்தைப் பயன்படுத்தி, ஊழியர்களை நிறுவனத்தின் பணத்தை வேறொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றச் செய்துள்ளனர்.

இந்த வகை மோசடியில், நிறுவன முதலாளியின் பெயர் மற்றும் சுயவிவரப் படத்தைப் பயன்படுத்தி, நிறுவனத்தின் கணக்காளர் அல்லது நிதித் துறை ஊழியருக்கு வாட்ஸ்அப்பில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

அதில், குறிப்பிட்ட ஒரு வங்கிக் கணக்கிற்கு உடனடியாகப் பணத்தை அனுப்புமாறு உத்தரவிடப்படுகிறது. இத்தகைய சைபர் மோசடிகள் ‘பாஸ் ஸ்கேம்’ என்று அழைக்கப்படுகின்றன.

அந்த குறுஞ்செய்தி, முதலாளியின் உண்மையான எண்ணிலிருந்து வரவில்லை என்றாலும், ஊழியரின் போனில் அது முதலாளியின் பெயரிலேயே தோன்றும். இதனால் ஊழியர் குறுஞ்செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல் பணத்தை அனுப்பிவிடும் ஆபத்து ஏற்படுகிறது.

By admin