• Wed. Aug 5th, 2026

24×7 Live News

Apdin News

குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்கள் கணவர்களைக் கொல்ல முடிவெடுத்த தருணம் எது?

Byadmin

Aug 5, 2026


குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் "நிரந்தரமான ஆபத்து நிலையில்" உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மரியானா ரோசெட்டி & பாவ்லா சர்ச்சில்
    • பதவி, பிபிசி நியூஸ் பிரேசில்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

எச்சரிக்கை: கட்டுரையில் உள்ள தகவல்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்

ஒரு கணநேரத்தில், 38 வயதான சமையலறை உதவியாளரான மிலேனே வாஸ்கொன்செல்லோஸ், தன்னால் உயிர் தப்ப முடியுமா என்பதை மனதில் கணக்கிட்டார்.

ரஃபேல் ஏற்கெனவே அவரது கழுத்தை நெரித்திருந்தார். மேலும், அவரை சோஃபாவின் மீது தள்ளியிருந்தார். வன்முறையை நிறுத்துமாறு அவர் கெஞ்சியபோதும், அதை ரஃபேல் புறக்கணித்ததாகவும், அதன் பிறகு தாக்குதல் இன்னும் தீவிரமானதாக மாறியதாகவும் மிலேனே போலீசாரிடம் தெரிவித்தார்.

சமையலறையை நோக்கிப் பார்த்தபோது, அங்கு ஒரு கத்தி இருப்பதைக் கண்டதாக மிலேனே கூறினார்.

“இன்னும் ஒரு முறை என்னை அடித்தால், என்னைக் காப்பாற்றிக்கொள்ள கிடைக்கும் எதையும் பயன்படுத்துவேன்,” என்று அவர் ரஃபேலிடம் எச்சரித்ததாக போலீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin