• Wed. Aug 5th, 2026

24×7 Live News

Apdin News

naked mole rat: ராணி எலி மற்ற பெண் எலிகள் கருவுறுவதை தடுப்பது எப்படி? ஆய்வில் புதிய தகவல்

Byadmin

Aug 5, 2026


ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பாலூட்டியான நேக்கட் மோல் எலிகள் 'யூசோஷியல்' ( சில விலங்குகளில் காணப்படும் அமைப்பின் மிக உயர்ந்த நிலையைக் குறிக்கப் பயன்படும் சொல்) தன்மையுடையவை என்பதை அறிவியலாளர்கள் 1980-களில் இருந்தே அறிந்துள்ளனர்.

பட மூலாதாரம், Felix Petermann, Max Delbrück Center

    • எழுதியவர், டெய்ஸி ஸ்டீபன்ஸ்
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஒரு வாசனை திரவியம் பெண்களுக்கு கருவுறும் திறனை தற்காலிகமாக இழக்கச் செய்யும் எனக் கூறுவது கற்பனையான விசித்திர நாவலின் கதைக்களத்தைப் போலத் தோன்றலாம்.

ஆனால், ஒரு புதிய ஆய்வில், ராணி நேக்கட் மோல் எலி (முடியற்ற எலிகள் என்றும் அழைக்கப்படுகின்றன), தான் மட்டுமே கருவுற்று, குட்டிகளை ஈன வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக, பயன்படுத்தும் முறை இது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பாலூட்டியான நேக்கட் மோல் எலிகள் ‘யூசோஷியல்’ (குறிப்பிட்ட சில விலங்குகளில் காணப்படும் அமைப்பின் மிக உயர்ந்த நிலையைக் குறிக்கப் பயன்படும் சொல்) தன்மையுடையவை என்பதை அறிவியலாளர்கள் 1980களில் இருந்தே அறிந்துள்ளனர்.

அதாவது, இவை வேலைக்கார எலிகள் மற்றும் உயர் மட்டத்தில் ஒரேயொரு ராணி எலியைக் கொண்டு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகக் குழுக்களாக வாழ்கின்றன.

அந்தக் குழுவில் இனப்பெருக்கம் செய்யும் ஒரே பெண் எலி ராணி மட்டுமே. அதே வேளையில் மற்ற ஆண் மற்றும் பெண் எலிகள் குட்டிகளைப் பராமரிக்கின்றன.

By admin