• Mon. Nov 23rd, 2026

24×7 Live News

Apdin News

கும்மிடிப்பூண்டியில் 80 ஆண்டுகளாக இரண்டாம் உலகப் போர் காலக் குண்டுகள் புதைந்துள்ளனவா? பிபிசி தமிழ் கள ஆய்வு

Byadmin

Nov 23, 2026


'80 ஆண்டுகளாக புதைந்து கிடக்கும் இரண்டாம் உலகப் போர் காலத்து வெடிகுண்டுகள்' -
படக்குறிப்பு, வனிதா

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட்டுக்குள் நுழையும்போதே காற்றில் ஒருவித ரசாயன நெடியை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஏராளமான தொழிற்சாலைகள், கூடவே கொஞ்சம் விவசாய நிலங்கள் எனக் கலவையான வாழ்வியலை உள்ளடக்கிய ஒன்றாக இப்பகுதி அமைந்துள்ளது.

இவற்றுக்கு நடுவே மிகப் பெரிய ஆபத்து ஒளிந்திருப்பதாக சிப்காட் அமைந்துள்ள சிறுபுழல்பேட்டை மற்றும் புதுக்கும்மிடிப்பூண்டி ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் அச்சப்படுகின்றனர்.

கும்மிடிப்பூண்டி சிப்காட்டுக்கு அருகில் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அங்கு வெடிகுண்டுகள் எதுவும் புதைக்கப்படவில்லை என்றும், 1948-ஆம் ஆண்டு நீண்ட தொலைவு எடுத்துச் செல்ல பாதுகாப்பற்றதாகக் கருதப்பட்ட சில வெடிபொருட்கள் மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் புதைக்கப்பட்டதாகவும் இந்திய விமானப்படை கூறுகிறது.

இதற்கிடையே, அருகில் தொழிற்சாலைகள் பெருகியுள்ளதால் அச்சத்தில் வாழ்வதாகக் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

By admin