• Mon. Nov 23rd, 2026

24×7 Live News

Apdin News

‘என் 2 கணவர்களில் ஒருவரை விவாகரத்து செய்தேன்.. ஆனாலும் அவர் என் குடும்பத்தின் ஓர் அங்கமாகவே இருக்கிறார்’

Byadmin

Nov 23, 2026


மூன்று பேர் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொள்ளும் நெருக்கமான புகைப்படம். நடுவில் இருக்கும் பெண் நாக்கை வெளியே நீட்டி விளையாட்டுத்தனமாக முகத்தைச் சுளிக்கிறார். அவருக்கு இருபுறமும் நிற்கும் இரண்டு ஆண்களும் கேமராவைப் பார்க்கின்றனர். அவர்கள் வெளிப்புறத்தில், ஒரு கதவுக்கு அருகில் நிற்கின்றனர்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கிரிஸ் ஆம்ஸ்ட்ராங்குக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள்தான் ஆகியிருந்தது. அப்போது அவருக்கு வயது 20களின் தொடக்கம். ஒருநாள் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவரது கணவர் பிராண்டன் பயங்கரமான கார் விபத்தில் சிக்கியிருப்பதாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“அந்தக் கணத்தில் என்னை விட்டு நான் வெளியேறிவிட்டதைப் போல உணர்ந்தேன். ஒருவருடைய வாழ்க்கையையே மாற்றிவிடும் செய்தியைத் தொலைபேசியில் கேட்கும் காட்சியைத் திரைப்படங்களில் பார்ப்போமே, அப்படியொரு அனுபவமாக அது இருந்தது.”

கிரிஸுக்கு 21 வயதாக இருந்தபோது பிராண்டனைத் திருமணம் செய்துகொண்டார். பிராண்டன் மிகவும் சுறுசுறுப்பானவர். பிரேக் டான்ஸ் ஆடுவார்; பனிச்சறுக்கு விளையாட்டிலும் ஈடுபடுவார். அன்பை வெளிப்படுத்துவதில் அவர் தயங்கியதே இல்லை. திடீரெனக் காதலை வெளிப்படுத்தும் வார்த்தைகளாலும், பிரமாண்டமான காதல் செயல்களாலும் கிரிஸை அடிக்கடி ஆச்சரியப்படுத்துவார்.

ஆனால், இருவரும் இணைந்து எதிர்காலத்தில் வாழத் திட்டமிட்டிருந்த வாழ்க்கை, அந்த ஒரு தொலைபேசி அழைப்பால் தலைகீழாக மாறியது.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், பிராண்டன் இறந்துவிட்டால் என்ன செய்வது என்று கிரிஸ் தனது தாயிடம் கேட்டார்.

By admin