• Sat. Apr 25th, 2026

24×7 Live News

Apdin News

குர்ஜித் சிங்: பஞ்சாபில் 300 அடி உயர செல்போன் டவரில் 18 மாதங்கள் தங்கி இவர் போராடியது ஏன்? எப்படி மீட்கப்பட்டார்?

Byadmin

Apr 25, 2026


43 வயதான குர்ஜித் சிங், அக்டோபர் 12, 2024 முதல் ஒரு மொபைல் போன் கோபுரத்தின் மீது அமர்ந்திருந்தார்; தற்போது அவர் கீழே இறக்கப்பட்டுள்ளார்.
படக்குறிப்பு, 43 வயதான குர்ஜித் சிங், அக்டோபர் 12, 2024 முதல் ஒரு மொபைல் போன் கோபுரத்தின் மீது அமர்ந்திருந்தார், தற்போது அவர் கீழே இறக்கப்பட்டுள்ளார்.

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் அதிர்ச்சியூட்டும் அல்லது ஆபத்தான தன்மையைக் கொண்டவை.

“18 மாதங்கள் மற்றும் 12 நாட்களுக்குப் பிறகு நான் பாதுகாப்பாகத் தரைக்குத் திரும்பியுள்ளேன்.” இவை பஞ்சாபின் பட்டியாலா மாவட்டம், சமானா நகரின் கேரி நாகியான் கிராமத்தைச் சேர்ந்த குர்ஜித் சிங்கின் வார்த்தைகள்.

43 வயதான குர்ஜித் சிங், கடந்த 2024 அக்டோபர் 12-ஆம் தேதி முதல் சமானா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மொபைல் போன் கோபுரம் ஒன்றின் மீது ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

அவர் வெள்ளிக்கிழமை (2026 ஏப்ரல் 24) காலை சுமார் 7.45 மணி அளவில் கோபுரத்திலிருந்து கீழே இறக்கப்பட்டார்.

‘புனித நூல் அவமதிப்புச் சம்பவங்களை’ மிகக் கடுமையாகக் கையாளும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்து வந்தார்.

By admin