• Sat. Apr 25th, 2026

24×7 Live News

Apdin News

சேலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.220-ஆக சரிவு

Byadmin

Apr 25, 2026


சேலம் டவுன் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு ஓமலூர், மேச்சேரி, வாழப்பாடி, ஆத்தூர், வலசையூர், பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

அதேபோல சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இங்கு அமாவாசை, பவுர்ணமி, பண்டிகை மற்றும் முகூர்த்த தினங்களில் பூக்களின் தேவை காரணமாக விற்பனை நன்றாக இருக்கும்.

தற்போது அனைத்து பகுதிகளிலும் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வரத்து அதிகரித்து பூக்கள் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் குண்டு மல்லிகை கிலோ ரூ‌.1000 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் படிப்படியாக விலை குறைந்து இன்று குண்டு மல்லிகை கிலோ ரூ.220-க்கு விற்கப்பட்டது. மற்ற ரக பூக்களில் பெரும்பாலானவை விலை குறைந்தும் ஒரு சில விலை அதிகரித்தும் விற்பனை செய்யப்பட்டன.

சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம்:-

(1 கிலோ கணக்கில்) : குண்டு மல்லிகை – ரூ.220, முல்லை – ரூ.120, காக்கட்டான் – ரூ.160, கலர் காக்கட்டான் – ரூ.80, மலை காக்கட்டான் – ரூ.160, ஏற்காடு மலை காக்கட்டான் – ரூ.160, சம்மங்கி – ரூ.50, சாதா சம்மங்கி – ரூ.80, அரளி – ரூ.100, வெள்ளை அரளி – ரூ.120, மஞ்சள் அரளி – ரூ.120, செவ்வரளி – ரூ.120, ஐ.செவ்வரளி – ரூ.100, நந்தியா வட்டம் – ரூ.300, சின்ன நந்தியா வட்டம் – ரூ.400 என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பூக்கள் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.

By admin