• Sat. Apr 25th, 2026

24×7 Live News

Apdin News

சேர்வைக்காரன்பட்டி: பட்டாசு ஆலை விபத்தில் 19 உயிர்களை பறிகொடுத்த கிராமம்: பிபிசி களஆய்வு!

Byadmin

Apr 25, 2026


விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை
படக்குறிப்பு, விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்த கட்டுரையின் சில பகுதிகள் சங்கடம் தரலாம்

விருதுநகர் மாவட்டம் கணக்கார்பட்டி கிராமத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். சமீபத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்துக்களில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியதாக இந்த விபத்து இருக்கிறது.

”இந்த தீ விபத்தில் எங்கள் அப்பா, அம்மா இருவருமே இறந்துவிட்டார்கள். அப்பாவுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ததால் உடலை அடையாளம் கண்டு கொண்டோம். அம்மாவுக்கு பல்லை வைத்துதான் அடையாளம் காண முடிந்தது!”

வார்த்தைகளை நிறைவு செய்ய முடியாமல் விம்மி அழுகிறார் முனீஸ்வரி. அவருடைய 14 வயது தம்பி, தன் தாய் தந்தை மறைவுக்காக மொட்டை எடுத்துவிட்டு அருகில் சோகத்துடன் நிற்கிறார்.

” ஞாயிறு வேலைக்குப் போனால் கிடைக்கும் ஊதியம் ஏதாவது வீட்டுச்செலவுக்கு ஆகுமென்று போன இடத்தில் எனது மனைவி தீ விபத்தில் உயிரிழந்து விட்டார்.”

By admin