இங்கிலாந்தில் பிரைட்டன் (Brighton) கடற்கரையில் இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், புகலிடம் கோரி வந்த மூன்று நபர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதில் ஒருவர் ஏற்கெனவே எகிப்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 4ஆம் திகதி, இரவு நேரத்தில் தனது நண்பர்களிடமிருந்து பிரிந்து தனியாகவும், மயக்க நிலையிலும் இருந்த அந்தப் பெண்ணை இந்த மூவரும் இடைமறித்துள்ளனர்.
இப்ராஹிம் அல்ஷாபே (வயது 25) மற்றும் அப்துல்லா அகமதி (வயது 26) ஆகிய இருவர் அந்தப் பெண்ணைக் கடற்கரை மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது கரின் அல்-தனசூர்ட் (வயது 20) என்ற மற்றொருவர், இந்த கொடூரச் செயலைத் தனது அலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும் போது, அவர்கள் தன்னை மிருகத்தைப் போல நடத்தியதாகவும், சிரித்துக்கொண்டே தன்னை வதைத்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் தற்செயலானது அல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரம் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த ஆலோசனையைத் தொடர்ந்து, ஹோவ் கிரவுன் நீதிமன்றம் (Hove Crown Court) இந்த மூவரையும் குற்றவாளிகள் என அறிவித்தது.
The post பிரைட்டன் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: புகலிட கோரிக்கையாளர்கள் மூவர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு appeared first on Vanakkam London.